குளிர் நிறைந்த பெட்டி;
குளிர் பெட்டியின் பகுதி குளிர்தான் இருக்கும்;
பலவித காய்கறிகளை போல,
வகை தொகையான மனிதர்கள் பயணம் செய்யும் பெட்டி
ஒருவர் சொல் செல்லிலும்
மற்றொருவர் சிரிப்பு பல்லிலும் இருக்க,
தாவி குதித்து வந்த சிறுவன்
தனது அம்மாவை கொஞ்சி தடவும்
அவன் கைகள் இருக்க,
அந்த தாய் மட்டும்
சற்று சிந்தனையிலும்
கொஞ்சம் தயக்கத்திலும்
காணப்பட்டாள்.
ஒருபக்கம் நிர்வாகி அமரச்சொல்ல
மறுபக்கம் மாட்டேன் என்று சிறுவன் கதற,
பார்ப்பவருக்கு புரிந்தது
அம்மாவின் இருக்கை எண் சிறுவனின் இருக்கை எண்ணிற்கு வெகுதூரம் இருந்தது என்று
வெறும் ஐந்து நிமிடம்தான் இருக்கும்
அருகில் அமர்ந்திருந்த இரண்டுபேர் இறங்கிவிட்டார்க்கள்
ஓடிவந்து சிறுவன் அமர
அவன் தாய் வந்து
அவனை கட்டி அணைக்க,
ஆஹா என்ன அற்புதம்!
இக்காட்சியை கண்டதும்
உதட்டில் சிரிப்போடு மனநிறைவோடு கண்கள் உறங்கியது.
No comments:
Post a Comment